"பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்' என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப் பணியின் ஒரு கட்டமாக அவர்களின் பயணம் அமைந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சிறார்களிடம் கிரிக்கெட் திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இயன் பொத்தம், வடக்கில் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்த்துத் தான் அதிர்ந்து போனார் என்று கூறினார்.
வடக்குச் சிறார்களிடமுள்ள திறமைகள் தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த முப்பது வருடங்களாக தெற்கில் மக்கள் அனுபவித்த வசதிகள் வடக்குகிழக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததாக இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு மேற்குலக நாடுகள் உத