Tuesday, August 5, 2025

அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை

 இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை வியாழக்கிழமை (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது.



இந்த குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது.

இது களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் IVF நிலையத்தின் ஒரு வருட கால முயற்சியின் விளைவாக இடம்பெற்றுள்ளது.

பிரசவத்தின் பின்னர் 31 வயதுடைய தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த IVF செயற்கை கருத்தரிப்பு முறை முதன் முதலில் பல்கலைக்கழகத்தின் கருத்தரித்தல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கம் நடத்தும் IVF திட்டத்திற்குப் பின்னர் அரசாங்க வைத்தியசாலையில் குழந்தை ஒன்று பிறப்பது இதுவே முதல் முறை ஆகும்.

களனி பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர் பேராசிரியர் ரசிக்கா ஹேரத் தலைமையிலான மருத்துவக் குழுவால் சிசேரியன் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனை, அதே பீடத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளரும் கருத்தரித்தல் வைத்தியர் நிபுணர் சுரங்க ஹெட்டிபத்திரண தலைமையிலான மருத்துவக் குழுவால் நடத்தப்பட்ட அரசாங்க கருத்தரித்தல் மையத்தில் நடத்தப்பட்ட முதலாவது வெற்றிகரமான IVF கருத்தரிப்பு என்பதிலும் குறிப்பிடத்தக்கது.

Sunday, June 29, 2025

MY HUSTURY

 











இந்த வாய்ப்பு கிடைத்ததற்ற்கு முதலில் நன்றி 


நான் முதலில் கணணியினை பார்க்கும் பொழுது அது இன்றைய காலத்துடன் ஒப்பிடும் பொழுது மிகவும் பெரிதாக இருந்தது அன்றைய மவுஸினை நினைத்தல் இன்றும் வியப்பாக உள்ளது அது மிகவும் பெரிய பாரமான BOOL கொண்டிருந்தது அப்பொழுது 1998 WINDOWS 98  இல் தனது பயணத்தை ஆரம்பித்தேன் ஆரம்பத்தில் இன்று பயன்படுத்தும்  memory card அன்று பெரிய floopy dis ஆகவே காணப்பட்ட்து  அந்த அடித்தளம் இன்று நான் கனனைத்துறையில் உயர்கல்வியினை கடப்பதற்கு ஆர்வத்தினை ஏற்படுத்தினாலும் குடும்ப பொருளாதார சுமை காரணமாக கல்வியினை தொடரமுடியவில்லை 
 எனினும் இன்று கணணித்துறையில் google location guitar and youtube channel ,own website ,digital media marketing , data entry போன்ற பலவற்றினை கையாளும் திறனை வளர்த்துள்ளேன் 

தற்பொழுது வைத்தியசாலையில்  வேலை செய்வதுடன் ஊடகத்துறையில் பகுதி =மாக வேலை செய்கின்றேன் எனக்கு இந்த கணனியுகம் புதிய உந்துதல் மற்றும் புதிய விடயங்களை கற்ற்கும் ஆற்ரவம் என்பது என்னை வளர்த்து எனலாம்